Thursday, January 23, 2014

போரூர் பேரூராட்சியின் முதல் தலைவர்.

    
    மிசா P.K.R என்று பிரபலமாக அழைக்கப்பட்ட P.K.ராஜகோபால் (16 செப்டம்பர் 1941 – 17 பிப்ரவரி 2002) போரூரின் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டார்.. போரூர் பேரூராட்சியாக உருவாக்கப்பட்டப் போது இவரே அதன் முதல் பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார்..

    “போரூர்” (போர்+ஊர்) பெயரிலே தெரிவதைப் போல பெரும் பழங்காலத்தில் “போர் நடந்த ஊர்” என்று நம்பப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் போரூர் ஒரு கடுமையான போர் தளமாக இருந்ததாக கருதப்படுகிறது.

புதிதாய் உருவான போரூர் பேரூராட்சியில் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை மேப்பாடு, மின்சாரம், பள்ளி கட்டிடம், இடுகாடு போன்றவற்றை இவரது நிர்வாக திறமையால் தொலைநோக்குப் திட்டங்களை தீட்டி குறுகிய காலத்தில் சிறப்பாக செய்து முடித்தார்.

    1௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்த குருஸ்தலமான ராமநாத ஈஸ்வரர் கோவிலுக்கு இவர் அறங்காவலராக பதவி வகித்தார்..

ராமநாத ஈஸ்வரர் கோவில்
    சென்னை சைதாபேட்டையில் அமைந்துள்ள சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கியின் தலைவராக இவர் பதவி வகித்தார்.


சைதாப்பேட்டை கூட்டுறவு வங்கி.

                     

போரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தி.மு.கழகத்தை வளர்த்த காளை P.K.R..



மிசா P.K.R 


             மிசா P.K.R என்று பிரபலமாக அழைக்கப்பட்ட P.K.ராஜகோபால் (16 செப்டம்பர் 1941 – 17 பிப்ரவரி 2002) தன் வாழ்நாள் முழுவதும் தி.மு.கவின் உண்மையான போராளியாக திகழ்ந்தார்.

    அவர் அப்போது ஆண்ட காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பொது பிரச்சனைகளை கண்டித்து தி.மு.க சார்பில் போராட்டங்களை முன்னின்று நடத்தி பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை சென்றார்..

     இவர் 1975 ஆம் ஆண்டு இந்திரா அரசு கழகத்தினர் மீது ஏவிய மிசா சட்டத்தின் கீழ் தளபதி மு.க.ஸ்டாலின் உடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவரை காவல்த்துறை அதிகாரிகள் மிகவும் கொடூரமாக தாக்கினர்...


தனது மகன் P.K.R.மதன் அவர்களின் திருமணத்தின்போது தளபதியுடன்  P.K.R 

    இவர் கழகத்திற்கும் கழகத் தலைவருக்கும் மிகவும் துடிப்புமிக்க செயல்வீரராக செயல்ப்பட்டு வந்தார்.

     போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தி.மு.கழகம் மாபெரும் வெற்றிகளை பெற இவர் முக்கிய பங்கு ஆற்றினார். இவரால் போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டரம் தி.மு.கழகத்தின் மாபெரும் கோட்டையாக 2001ஆம் ஆண்டு வரை இருந்தது வந்தது. 

     P.K.R அவர்களை பார்த்து வியந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு முறை இவரை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து அ.தி.மு.கவில் இணையும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் இவரோ தனது உயிரில் இறுதி மூச்சு உள்ள வரை தி.மு.க வின் படைவீரனாக தான் இருப்பேன் என்று கூறி புறப்பட்டார். அதே போல் இறுதியில் அடக்கம் ஆகும் வரை தன மேனியில் கழகக் கொடியினை சுமர்ந்து சென்றார்.  

      இவர் போரூர் தி.மு.க வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார், மேலும் தனது இறுதி காலம் வரை போரூர் பேரூர் கழக செயலாளராக பொறுப்பு வகித்தார்.